தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவனின் தந்தை கைது; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!
depavali pestivel capital delhi

தலைநகர் டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிக இரைச்சல், சுகாதாரக்கேடு, காற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு காரணமாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களால் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்டாசு வெடிக்க சில நிபந்தனைகளுடன் கூடிய பரபரப்பான தீர்ப்பினை வழங்கியது. அதில் குறிப்பாக தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் அதிக காற்று மாசுபாடு காரணமாக அங்கு பட்டாசு வெடிக்க முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லி காசிப்பூர் பகுதியில் சிறுவன் ஒருவன் தடையை மீறி பட்டாசு வெடித்துள்ளான். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவனை எச்சரித்திருக்கிறார்கள்.
எனினும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்த வண்ணம் இருந்துள்ளான். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அச்சிறுவனின் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் முடிவில் அதிகபட்ச அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.