×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களுக்கு படப்படப்பு, தூக்கமின்மை பிரச்சனை உள்ளதா? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.!அதனை எப்படி சரி செய்வது?

Dehydration problems

Advertisement

தற்போதைய வாழ்க்கை முறையில் பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைவால் வேகமாக மூச்சு வாங்குதல், வேகமான இதயத்துடிப்பு, படபடப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல அறிகுறிகள் தென்படும். நீர்ச்சத்து குறைபாட்டை நாம் உணவின் மூலமாகவே சரி செய்து கொள்ளலாம். தர்பூசணி, வெள்ளரி என நீர்சத்து மிகுந்த பழங்கள் காற்கறிகளை உண்ணுங்கள். இவை உடலில் நீர் சத்து குறைவதினை வெகுவாய் தவிர்க்கும்.

நீர் சத்து குறைவு போன்றவை ரத்த அழுத்தத்தினை உயர்த்தும். இருதயம் கூடுதல் வேலை செய்ய வேண்டி ஆகிவிடும். இது உங்களை சோர்வாக ஆக்கக் கூடும். உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் அதை நாம் dehydration என்கிறோம்.  உடலுக்கு தேவையான தண்ணீர் குறைந்து விட்டால் நம்மால் சாதாரணமாக செயல்பட இயலாது.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக அளவு மது அருந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நீர்ச்சத்துக் குறைவு அதிகம் ஏற்படும்.   நீர்ச்சத்து குறைவை தடுக்க அடிக்கடி  தண்ணீர்  குடிப்பது,  இளநீர், பழச்சாறுகள், போன்ற தண்ணீர் நிறைந்துள்ளதை எடுத்துக்கொளவது உடலில் நீர் தன்மையை சமப்படுத்திக்கொண்டே இருக்கும். மேலும் டீஹைடிரேஷன் இருப்பவர்கள் டி, காபி, சோடா அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான dehydration ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#water #Dehydration
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story