×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி.?

சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி.?

Advertisement

உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கார்ன் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1/2 கப்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரட் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

முதலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பின் கார்னை மிக்சரில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கார்னை போடு அதனுடன் உருளைகிளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, பிரட் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த மாவு கலவையினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை போட்டு சூடானதும்   அதில் மாவு கலவையினை கட்லேட் அளவிற்கு போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும்.வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Corn potato cutlet #Tips #Recipe
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story