×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுக்கு புத்துணர்ச்சியையும், நாவிற்கு சுவையையும் தரும் தேங்காய் பால் ரசம் செய்து எப்படி...

உடலுக்கு புத்துணர்ச்சியையும், நாவிற்கு சுவையையும் தரும் தேங்காய் பால் ரசம் செய்து எப்படி...

Advertisement

நாள் முழுவதும் உடலுக்கு புத்துணர்ச்சியையும், உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. இத்தகைய தேங்காய் பாலை வைத்து சுவையான ரசம் செய்து எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கெட்டி தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் கலந்த தேங்காய் பால் - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 7 பற்கள்
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

முதலில் பூண்டை இடித்து வைத்து கொள்ளவும். கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் புளி மற்றும் உப்பை தண்ணீர் கலந்த தேங்காய் பாலில் ஊற வைத்து கரைத்து வைத்து கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இடித்த பூண்டுப் பற்கள், மஞ்சள் தூளை போட்டு நன்கு வதக்கவும். பின் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். 

நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிநிலை அடங்கியதும் கெட்டி தேங்காய் பாலை ஊற்றுங்கள். கொதிக்கும் போதே ஊற்றாதீர்கள். இல்லையெனில் தேங்காய் திரிந்து விடும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coconut milk rasam #Recipe #healthy tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story