×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுவையான சத்து நிறைந்த தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி...

சுவையான சத்து நிறைந்த தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி...

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான சத்து நிறைந்த தேங்காய் பால் அல்வா வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

தேங்காய் - 1 பெரியது 
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன் 
நெய் - 2 ஸ்பூன் 
முந்தரி பருப்பு - 10 கிராம்

 வெண்ணெய் - 2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

நாட்டு சர்க்கரை - 1 கப்.

முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும். ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து ஊற்ற வேண்டும். தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிளற வேண்டும்.

ஒரு 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து இடைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூவி கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும். கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும். சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coconut milk halwa #Recipe #tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story