×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரும்புசத்து, ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய்ப்பால் அல்வா.. இன்றே செய்து அசத்துங்கள்..!!

இரும்புசத்து, ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய்ப்பால் அல்வா.. இன்றே செய்து அசத்துங்கள்..!!

Advertisement

தேங்காய் பாலில் இரும்புசத்து, ஊட்டச்சத்து, கொழுப்பு அதிகமாக இருப்பதால் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். தேங்காய்ப்பால் அல்வா எப்படி செய்வது என தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

முந்திரிப் பருப்பு - 10 கிராம்

நெய் - இரண்டு தேக்கரண்டி 

பச்சரிசி - 3 தேக்கரண்டி 

தேங்காய் - ஒன்று 

வெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி 

நாட்டு சர்க்கரை - ஒரு கப்

செய்முறை :

★முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

★அடுத்து தேங்காயை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலாக எடுக்கவும்.

★பின் ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

★ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை இரண்டாக உடைத்து வறுக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய தேங்காயையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

★அடுத்து கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், திக்கான தேங்காய்பால் எடுத்து ஊற்ற வேண்டும்.

★தேங்காய்பாலை நன்றாக கிளறிவிட்டு, அரைத்த பச்சரிசி மாவை ஊற்றி கலக்கி நாட்டு சர்க்கரை வேண்டும்.

★அடுப்பை சிம்மில் வைத்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறி, ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்

★கட்டியில்லாமல் இடையிடையே கிளறி, அல்வா பதத்திற்கு வந்ததும் தேங்காய்பால் அல்வா தயாராகிவிடும்

★இறுதியாக முந்திரி பருப்பு மற்றும் வறுத்த தேங்காய் போட்டு இறக்கி பரிமாறினால் சுவை அமிர்தத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coconut milk halwa #Kitchen Corner #Ladies Corner #தேங்காய்ப்பால் அல்வா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story