குழந்தைகளுக்கு எதாவது தொண்டையில் சிக்கி சோக்கிங் ஏற்பட்டால் உயிர் காப்பாற்ற செய்யவேண்டிய முதலுதவி இதுதான்! டாக்டரின் செய்முறை விளக்கம் இதோ...
சோக்கிங் ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்றும் ஹெய்ம்லிச் டெக்னிக் குறித்து டாக்டர் பிரகாஷ்மூர்த்தி விளக்கம். பெரியவர்கள், சிறுவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி முறைகள்.
தொண்டையில் உணவு அல்லது மாத்திரை சிக்கி சுவாசம் முடியாமல் சிக்கிக் கொள்வது உயிருக்கு ஆபத்தான சூழல். இப்படிப்பட்ட சோக்கிங் சம்பவங்களில் சரியான முதலுதவி உடனடியாக செய்யப்பட்டால் உயிரைக் காப்பாற்ற முடியும். மருத்துவ உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் ஹெய்ம்லிச் டெக்னிக் அதற்கான முக்கியமான வழிமுறை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெய்ம்லிச் டெக்னிக் என்ன?
டாக்டர் பிரகாஷ்மூர்த்தி அவர்கள், ஹெய்ம்லிச் டெக்னிக் (Heimlich's maneuver) என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட முதலுதவி முறையென கூறுகிறார். இது பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் தனித்தனி முறையில் பயன்படுத்தப்படுகிறது. சிபிஆர் (CPR) கற்றுக்கொடுக்கப்படுவது போலவே, இந்த டெக்னிக் பயிற்சியும் அனைவருக்கும் கற்றுத் தரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
பெரியவர்களுக்கு செய்யும் முறை
சோக்கிங் ஏற்பட்ட பெரியவர் அல்லது சிறுவனின் பின்புறத்தில் நின்று, இரண்டு கைகளாலும் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும். கைகளை வயிற்றுக்கு கொஞ்சம் மேலாக வைத்து, முதலில் உட்புறமாகவும் பின்னர் மேல்நோக்கியும் பலமாக அழுத்த வேண்டும். இதை 2–3 முறை செய்தால் தொண்டையில் மாட்டிக் கொண்ட பொருள் வெளியேறும்.
இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
சிறுவர்களுக்கு செய்யும் முறை
சிறிய குழந்தைகள் சோக் ஆனால், அவர்களை குப்புறமாக படுக்க வைத்து, முதுகுத்தண்டு பகுதியில் 5 முறை கையால் தட்ட வேண்டும். பின்னர் குழந்தையை நேராக மல்லாக்க படுக்க வைத்து, மார்பு பகுதியில் இரண்டு விரல்களால் ஒரு இன்ச் அளவுக்கு அழுத்த வேண்டும். இதை 3–4 முறை செய்தால் தொண்டையில் சிக்கிய பொருள் வெளியேறும்.
இந்த முறையின் பலன்
ஹெய்ம்லிச் டெக்னிக், CPR போலவே மருத்துவ ரீதியாக நம்பகமானது. இதை சரியாக செய்தால், சோக்கிங் ஏற்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதில் ஐயமில்லை. 4 வயது சிறுவனுக்கு இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவன் உயிர் பிழைத்திருப்பான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, முதலுதவி குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறுவது அவசியம். சோக்கிங் போன்ற அவசர சூழ்நிலைகளில் ஹெய்ம்லிச் டெக்னிக் தெரிந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.
இதையும் படிங்க: என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....