×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்லேட்டில் சுவையான மொறு மொறு சாக்லேட் தோசை செய்வது எப்படி...

சாக்லேட்டில் சுவையான மொறு மொறு சாக்லேட் தோசை செய்வது எப்படி...

Advertisement

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படியான சாக்லேட்டை வைத்து சுவையான மொறு மொறு தோசை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப் 
சாக்லேட் சிரப் - 1/4 கப் 
நெய் - 4 ஸ்பூன் 
முந்திரி - தேவையான அளவு திராட்சை - தேவையான அளவு பாதாம் - தேவையான அளவு செர்ரி பழம் - தேவையான அளவு 
வெண்ணெய் - தேவையான அளவு.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கப் மாவை ஊற்றி மெல்லிய தோசையாக ஊற்றவும். அதன் மேல் வெண்ணெயை தடவவும். அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி தடவி விடவும் பின் அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவி நன்கு வேக விடவும்.

அந்த தோசையை திருப்பி போடாமல் அப்படியே ரோல் செய்யவும். பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம். எளிதில் சுவையான சாக்லேட் தோசை தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chocolate dosa #Recipe #tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story