×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிக்கனை கழுவி சமைச்சா இவ்ளோ ஆபத்தா.?! எச்சரிக்கையாக இருங்கள்.!

சிக்கனை கழுவி சமைச்சா இவ்ளோ ஆபத்தா.?! எச்சரிக்கையாக இருங்கள்.!

Advertisement

சமைப்பதற்கு முன் கோழிக்கறியை கழுவும் போது அதிலுள்ள சால்மோனெல்லா போன்ற தீய பாக்டீரியாக்கள் தண்ணீரோடு சேர்ந்து சமையலறை, பாத்திரங்கள் மற்றும் கைகளிலும் பரவ வாய்ப்பு உள்ளது. இதற்கு "Cross -contamination" என்று பெயர்.

இறைச்சியை கழுவும் போது அதிலிருந்து தெறிக்கும் மிகச் சிறிய நீர் துளிகள் சுமார் 3 அடி தூரம் வரை பரவக்கூடியது. இது மற்ற உணவுகளிலோ அல்லது சுத்தமான பாத்திரத்திலோ படும்போது நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. 

கோழிக்கறியில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க மிகச்சிறந்த வழி அதனை நன்கு வேக வைப்பது மட்டுமே ஆகும். குறைந்தது 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சமைக்கும் போது அனைத்து பாக்டீரியாக்களும் தானாகவே அழிந்து விடுகிறது.

இதையும் படிங்க: பிரிட்ஜில் சிக்கன், மட்டன் சேமிக்கலாமா?.. எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும்?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!

இறைச்சியில் அதிக ரத்தம் அல்லது ஈரப்பதம் இருந்தால், காகிதத் துண்டு(Tissue) கொண்டு மெதுவாக துடைத்து எடுக்கலாம்.அந்தக் துண்டினை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இறைச்சியை கையாளும் பொழுது கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இறைச்சியை கையாண்ட பிறகு நாம் கைகளையும், அவ்விடம் மற்றும் பொருட்களையும் கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். எனவே, இந்த முறையை கொண்டு பாக்டீரியா பரவுவதை தவிர்த்திடுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகை செய்யுங்கள்.

இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chicken #kitchen #cross contamination
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story