கோடை வெப்பத்தை தாங்க முடியலையா.?! உடனே இதை பன்னுங்க.!
கோடை வெப்பத்தை தாங்க முடியலையா.?! உடனே இதை பன்னுங்க.!

அடிக்கிற வெயிலுக்கு மோர் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும். தயிருடன் தண்ணீர் சேர்த்து கடைந்தால் மோர் தயார். நம் முன்னோர்கள் இதையே அதிகம் உணவில் எடுத்துக் கொண்டார்களாம். தயிரை விட மோர் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வேகமாக உடல் சூட்டைத் தனிக்கும். இருப்பினும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பத்திற்க்கு மோரில் சில பொருட்கள் கலந்து குடித்தால் அதிக பயன்தரும். அது என்ன பொருள் என்று கீழே பார்க்கலாம்.
கோடைக்காலத்தில் நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நாக்கு வறட்சி, தொண்டை வறட்சி, உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்பொழுது ஒரு கோப்பை மோர் குடிப்பது மிகவும் அவசியம். மோரில் சிறிதளவு உப்பு, புதினா,சர்க்கரை கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் மோர் குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்தால் அமிலத்தன்மை குறையும். மோரில் எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். தினமும் காலையில் ஒரு கோப்பை மோர் குடித்தால் நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உணவில் இருக்கும் சத்துக்களை மட்டும் உடலுக்குள் அனுப்பும் வேலையை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.