×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாம்புகளை வைத்து மிரட்டி பெண்களுடன் குதூகலமாக இருந்த இளைஞர்! இறுதியில் நேர்ந்த சோகம்

boy scared girls with snakes and raped

Advertisement

தினமும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்காரம் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அதை எப்படியெல்லாம் அரங்கேற்றுகிறார்கள் என்பதில் தான் சுவாரசியங்கள் அடங்கியுள்ளன. ஆனால் அதே சுவாரசியம் அவர்களுக்கே வினையாய் அமைவதுதான் மிகப்பெரிய சோகம். அப்படி வித்தியாசமான முறையில் பெண்களை பயமுறுத்தி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த சீனாவை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

சீனாவின் ஃபுசோ நகரை சேர்ந்த பான் என்ற இளைஞர் பாம்பு வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். விஷ பாம்புகளை வளர்த்து வந்த இவர் அதே பாம்புகளை கொண்டு பல பெண்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதேபோன்று அவர் பல பெண்களை சீரழித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குவா என்ற இளம்பெண்ணை மயக்கி ஃபுசோ நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது அந்த இளைஞர், ஒரு சாக்குப்பையில் கொண்டுவந்திருந்த மூன்று விஷப் பாம்புகளை எடுத்து அந்த பெண்ணிடம் காட்டி பயமுறுத்தியுள்ளார். தன்னோடு உல்லாசமாக இருக்க சம்மதிக்கவில்லை என்றால் பாம்புகளை வைத்து கடிக்க விடப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண்ணும் அந்த இளைஞரின் ஆசைக்கு இணங்கி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் அதே அறையில் இருந்த  பாத்டப்பில் பாம்புகளுடன் விளையாடியபடியே குளித்துள்ளார். அப்போது ஒரு பாம்பு அவரை கொத்தி உள்ளது. அதை பெரிதாக எண்ணாத அந்த இளைஞர் கட்டிலில் வந்து படுத்துள்ளார். இதனை கண்டு அஞ்சிய அந்த பெண் நாடு இரவிலேயே ஓட்டலில் இருந்து கிளம்பி தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு நடந்தவற்றை தன் பெற்றோரிடம் கூறிய அந்தப் பெண் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றனர். அப்போது அந்த அறையில் சென்று பார்த்தபோது அந்த இளைஞர் கட்டிலில் படுத்தபடியே இறந்து கிடந்துள்ளார். ரத்த காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவரது வாயிலிருந்து நுரை மட்டும் வந்திருந்தது. மேலும் பாம்புகளை கொண்டுவந்திருந்த சாக்குப்பையும் அங்கு கிடந்துள்ளது. இவைகளை வைத்து அந்தப் பெண் கூறியவை உண்மைதான் என்பதை உறுதி செய்த போலீசார் பாம்புகளை பிடிப்பதற்காக தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர்.

பாம்பினை தேடிச்சென்ற தீயணைப்பு வீரர்கள் ஓட்டலில் வெவ்வேறு இடங்களில் மூன்று விஷப் பாம்புகளை பிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று தெற்காசிய மற்றும் தெற்கு சீனாவில் மட்டுமே வளரக்கூடிய மிகக் கொடிய விஷ பாம்பு வகைகளில் ஒன்று. அந்த இளைஞரை பற்றி விசாரணை செய்ததில் அவர் இதேபோல் பல பெண்களை பாம்புகளை வைத்து மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#boy scared girls with snakes and raped #boy dead after rape #china #fan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story