தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கணுமா..? தினமும் மாடிப்படி ஏறுங்க..!!

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கணுமா..? தினமும் மாடிப்படி ஏறுங்க..!!

Benefits of climbing the stairs daily....It can prevent heart attacks... Advertisement

மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு அதிக உடல் எடை காரணம் என்று கூறுகின்றனர். 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி ஒரு நாளைக்கு சாதாரணமாக 150 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். 

சர்வதேச அளவில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, மாடிப்படி ஏறுவது ஒருவகை உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. வேகமாகவோ, அல்லது மிதமாகவோ, மாடிப்படி ஏறுவதால் உடல் எடை குறையும் என்று கூறுகின்றனர்.

மாடிப்படிகளில் ஏறும்போது நமது தசைகள் வலுவடையும். மேலும் வயதாகும்போது உடலில் ஏற்படும் தளர்ச்சியை குறைக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள், மாடிப்படி ஏறுவதால் மெட்டபாலிக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். இதனால் என்டோர்பின்ஸ் சுரக்க உதவுகிறது. எனவே நமக்கு கூடுதல் சக்தி கிடைக்கும்.

சிலருக்கு மாடிப்படி ஏறுவதால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து, சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. வாரத்திற்கு 35 நிமிடங்கள் வரை மாடிப்படிகள் ஏறுவதால் நம் உடலுக்கு நன்மை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Life style #Heart Attacks #Climbing the Stairs Daily
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story