சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதால் ஆபத்தா? பொதுவான பழக்கம் பெரிய பிரச்சனை ஆகுமா! அவசியம் தெரிஞ்சிக்கோங்க...
வெளியிடங்களில் சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பது தொண்டை தொற்று, வைரஸ் தாக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை.
வெளியிடங்களில் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. வீட்டில் சுத்தமான சூழலில் இது ஒரு நல்ல பழக்கம் என்றாலும், பொது இடங்களில் இதைச் செய்வது உங்கள் உடல்நலத்திற்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவான பழக்கம், பெரிய பிழை
வீட்டில் சாப்பாட்டிற்கு பின் வாய் கொப்பளிப்பது வழக்கமானது. ஆனால் ஹோட்டல், திருமண மண்டபம், மெஸ் போன்ற இடங்களில் உள்ள குழாய்த் தண்ணீர் மூலம் வாய் கொப்பளிப்பது பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்திற்கு வழிவகுக்கிறது. இவை அடிக்கடி சுத்தம் செய்யப்படாத தொட்டிகளில் இருந்து வரும் நீராக இருப்பதால், நோய் கிருமிகள் அங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆபத்தில் யார்?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பொது இடங்களில் Mouth Rinse செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் தொண்டை பகுதியில் எளிதில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தொற்று, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் பிற உடல் பிரச்சனைகளை உண்டாக்கும்.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!
மாற்று வழிமுறை
வெளியிடங்களில் Mouth Rinse செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், பாட்டிலில் கொண்டு செல்லும் சுத்தமான நீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும். இது உடல்நலத்திற்கேற்பட்ட பாதுகாப்பான நடைமுறையாகும்.
தூய்மையான வாழ்க்கை முறைகளும், ஒழுங்கான சுகாதார பழக்கங்களும் நம்மை பல நோய்களிலிருந்து காக்கும். சின்ன தவறுகள் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், பொது இடங்களில் மேற்கொள்ளும் பழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
இதையும் படிங்க: தூங்கும்போது ஏன் மொபைல் போன் யூஸ் பண்ணகூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க...