அய்யோ... இவ்வளவு ஆபத்தா! சில நிமிடங்களிலேயே மனிதர்களின் உயிரை பறிக்கும் ஜெல்லி மீன்!
உலகின் மிக ஆபத்தான கடல் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் Australian Box Jellyfish, சில நிமிடங்களில் உயிரை பறிக்கும் விஷத்தால் பயத்தை ஏற்படுத்துகிறது.
கடல்சார் உயிரினங்களில் மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது Australian Box Jellyfish எனப்படும் ஜெல்லி மீனாகும். Sea Wasp என்றும் அழைக்கப்படும் இந்த உயிரினம் உலகின் மிக ஆபத்தான ஜெல்லி மீன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விஷம் நிறைந்த உயிர்க்கொல்லி
இந்த ஜெல்லி மீனின் விழுதுகளில் மில்லியன் கணக்கான விஷக் காப்சுல்கள் காணப்படுகின்றன. அவை மனித உடலின் இரத்த ஓட்டத்தில் விஷத்தை செலுத்தி, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சில நிமிடங்களில் உயிர் பறிக்கும் தாக்கம்
விஷம் மிக வேகமாக செயல்படுவதால், சில நிமிடங்களிலேயே மனிதர்களின் உயிரை பறிக்கும் ஆற்றல் கொண்டதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த காரணத்தாலேயே இது கடல் உயிரினங்களில் மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பாம்பு விஷத்தையே சில நிமிடங்களில் முறிக்கும் செடி! எது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...
காண இயலாத வெளிர் நிறம்
வெளிர் நீல நிறத்தில் காணப்படும் இந்த ஜெல்லி மீனை கடல் தண்ணீரில் எளிதில் கண்டறிய முடியாது என்பதும் கூடுதல் ஆபத்தாகும். வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கடற்கரை பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான ஜெல்லி மீன் கடல்சார் ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து கவலைப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை - நேரடி மோதலில் யார் அதிக வலிமை?