இல்லத்தரசிகளே.. டீயை இப்படி குடிப்பீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தவறை திருத்திக்கோங்க.!
Tea: டீயை ஒரு நாளைக்கு எத்தனை முறை சுடவைத்து குடிக்கலாம்? டீயை எவ்வுளவு நேரம் கொதிக்க வைப்பது என்பது குறித்த கேள்விகளுக்கு இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றளவில் பலரால் விரும்பி குடிக்கப்படும் டீ குறித்து முக்கிய விஷயங்கள் நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
டீ குடிப்பது பலருக்கும் வாடிக்கையான பழக்கமாகிவிட்ட நிலையில், டீயின் சுவையை அதிகரிக்க நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல் நடக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர். கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கும் டானினின் அளவு அதிகமாகி இரும்புச்சத்து உறிஞ்சும் செயல்கள் தடுக்கப்படும்.
கசப்பு தன்மை அதிகமாகும்:
இதனால் அனீமியா தொடர்பான பிரச்சனை ஏற்படும். அதிக நேரம் கொதிக்க வைப்பதால் பாலில் இருக்கும் கால்சியம், வைட்டமின் பி12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் இழக்கப்படுகிறது. அதே போல டீயின் சுவை முழுமையாக மாறி கசப்பு தன்மை அடையும். அதிகமாக கொதிக்க வைப்பதால் டீயின் பிஎச் அளவு அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும் மாறும்.
இதையும் படிங்க: டிவி பார்த்தால் கண்களில் நீர் வருகிறதா?.. சாதாரணமாக நினைக்காதீங்க.. கண்கள் சொல்லும் எச்சரிக்கை.!
டீயை எவ்வுளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும்?
இதனால் புரதங்கள் சிதைந்து போகும். இந்த புரதங்களை வயிறு ஜீரணிக்க கஷ்டப்படும் என்பதால் வயிறு உப்புசம், வாயு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இந்த வகை டீயை உட்கொள்வதன் மூலம் ஆன்ட்டி ஆக்சிடென்ட் குறைந்து உடலில் ஆற்றல் அளவு கேள்விக்குறியாகும். டீயை அதிகபட்சம் 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதுமானது. ஏற்கனவே தயாரித்த டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.