×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாமதமாக திருமணம் செய்து கொள்வதால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

Affects of late marriage

Advertisement

இன்றைய வாழ்க்கை முறையில் பலர் பல்வேறு காரணங்களுக்காக தங்களது திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதன்பிறகு செய்துகொள்ளும் திருமணங்களால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகின்றன

எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக்கூடும்.

கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.

தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலையை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது. நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.

நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது தனித்து வாழ்வதில் ஒரு முக்கிய காரணம்.

சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்து விட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது. பொதுவாக, அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #Late marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story