×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளின் தோழியுடன் தந்தை உல்லாசம்; திருமணம் வரை சென்ற உறவு

55 year old man married daughter's friend

Advertisement

அமெரிக்காவில் 54 வயதான கெர்ன் லெய்மன் என்பவர் தனது மகளின் தோழியுடன் நெருக்கமாகி அவரையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் மகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரே இடத்தில் பணிபுரியும் டெய்லர் (27) மற்றும் அமண்டா (30) இருவரும் தோழிகளாக நெருங்கி பழகியுள்ளனர். அமண்டா தன் தோழியான டெய்லரை தனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் லெய்மனுடன் டெய்லர் நட்பாக பழகி வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு இந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இவர்களுடைய காதல் மிகவும் தீவிரம் அடைந்து விட்டது. இதனை அறிந்த டெய்லரின் பெற்றோர் தந்தை வயதுடைய ஒருவரை தங்களுடைய மகள் காதலிப்பதை எதிர்த்தனர். இவர்களின் காதலை பற்றி தெரிந்து கொண்ட அமண்டாவும் ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனாலும், டெய்லரும் லெய்மனும் திருமணம் செய்து கொண்டே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்ததால் தோழி அமண்டா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், டெய்லரும் - லெய்மனும் மகள் அமண்டா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தன்னுடன் 27 வயது மூத்தவரான லெய்மனை திருமணம் செய்து கொண்டதை பற்றி டெய்லர் கூறியுள்ளதாவது: 

"என் தோழியின் தந்தையாகிய லெய்மனை நான் முதல் முறையாக பார்க்கும் போது அவரது அழகில் மயங்கி விட்டேன். அவர் மேல் எனக்கு காதல் உண்டானது. எங்களது வயது வித்தியாசம் குறித்து எனக்கு எந்தவித கவலையும் இல்லை. எங்களை பார்ப்பவர்கள் தந்தை மகள் என நினைக்கின்றனர். மற்றவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்து நான் கவலைப்படவில்லை. என்னுடைய உயிர் தோழி எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லெய்மன் என் மீது பாசத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார்" என்றார்.

இதுகுறித்து லெய்மன் கூறுகையில் "டெய்லர் நகைச்சுவை உணர்வு கொண்டவள். அவர் மிகவும் நேர்மையானவள். எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழியாகவும் டெய்லர் இருந்து வருகிறாள்" என்றார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#55 year old man married daughter's friend #leyman taylor marriage #amanda taylor leyman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story