ஷாக் நியூஷ்! 220 மருந்துகள் தரமற்றவை... 1 மருத்து முற்றிலும் போலி! CDSCO வெளியிட்ட முழு பட்டியல்....!!!
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வில் 1,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 220 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவில் 220 மருந்துகள் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதும், ஒரு மருந்து போலியானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
220 மருந்துகள் தரமற்றவை என கண்டுபிடிப்பு
ஆய்வில் சிக்கிய மருந்துகள் காய்ச்சல், வலி நிவாரணம், அசிடிட்டி, உயர் ரத்த அழுத்தம், சளி மற்றும் கிருமித் தொற்று, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகளின் தரம் தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குறிப்பிட்ட மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாதது தெரியவந்தது.
இதையும் படிங்க: இந்த மாத்திரைகளை அதிகமாக எடுக்காத்தீங்க...! பாதிப்பு பலமாக இருக்கும்... மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை..!!!
ஒரு மருந்து போலியானது என உறுதி
தரமற்ற மருந்துகள் மட்டுமின்றி, பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் ஒரு மருந்து முற்றிலும் போலியானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்துகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளின் பெயர் மற்றும் விவரங்களை கவனமாக சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு விவரங்கள்
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக தரமற்ற மற்றும் போலி மருந்துகளின் முழு விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://cdsco.gov.in/) வெளியிடப்பட்டுள்ளன. மருந்துகளின் தரம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அங்கு சரிபார்த்துக் கொள்ளலாம். மருந்துகளை வாங்கும்போது உரிய விவரங்களை கவனித்து, சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பது முக்கியமாகும்.