தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 நிமிடத்தில், 5 பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய பேச்சிலர் குழம்பு.! 

2 நிமிடத்தில், 5 பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய பேச்சிலர் குழம்பு.! 

2 minutes bachelor recipe in tamil Advertisement

வெறும் 2 நிமிடத்தில் 5 பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய சூப்பரான, சுவையான பேச்சுலர் ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

உப்பு - தேவையான அளவு 
தயிர் - ஒரு கப் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிதளவு

இதையும் படிங்க: சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!

2 minutes

செய்முறை 

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு பவுலில் போட்டு அதில் ஒரு கப் தயிரை ஊற்றி கிளறவும். பின்னர், அதில் பெருங்காயத்தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 

அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும் கலக்கி வைத்துள்ள கலவையை அதில், சேர்த்து லேசாக கொதிக்க விடவும். 

கொதித்தவுடன் அதில் கொத்தமல்லி இலையை கிள்ளி, தூவி விட்டு அடுப்பை அணைக்கவும். இப்போது சூப்பரான பேச்சிலர் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் இதை சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: மசாலா பூண்டு சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#2 minutes #Bachelor recipe
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story