×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வர கூடாது..!! மாரடைப்பில் ஜிம்மில் சுருண்டு விழுந்து இளைஞர் மரணம்.. வைரல் சிசிடிவி வீடியோ..

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி

Advertisement

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதறவைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கோல்டன் என்னும் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி இரண்டு நாள் இலவச ஜிம் மற்றும் நடன பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 33 வயதான சுஜய் சாகர் என்ற இளைஞர் கலந்துகொண்டு உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, ஜிமில் இருந்து வெளியே வந்த அவர் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து தண்ணீர் குடித்து இளைப்பாற்றியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து எழுந்துசெல்ல முற்பட்ட அவர், நெஞ்சுவலி மேலும் அதிகமாகவே நெஞ்சை பிடித்துக்கொண்டு மீண்டும் படிக்கட்டில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுஜய் சாகர் சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துசென்றநிலையில், மருத்துவமனை செல்லும் வழியில்லையே சுஜய் சாகர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cctv #Gym Heart Attack #Viral videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story