தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த கொடூரம்... இளைஞர் கைது...!!

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த கொடூரம்... இளைஞர் கைது...!!

Youth arrested for raping woman, strangling her to death and pouring 10 kg of salt on her body Advertisement

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுதை நெரித்து கொன்று 10 கிலோ உப்பை உடல் மீது கொட்டி புதைத்த இளைஞர் கைது.

பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியிலிருந்து ஒரு இளம் பெண்ணின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து நடந்த விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கும்  திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டட்து. அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவிருந்தது.

ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன் அந்த பெண்ணுடன் போனில் பேசி நெருங்கி பழகியுள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பிஜேந்திரன் அந்த பெண்ணுக்கு போன் செய்து, அர்வால் பஜாருக்கு அழைத்துள்ளார். இதை தொடர்ந்து, அந்த பெண் அங்கு சென்றுள்ளார். அவரை ஜெகனாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பிஜேந்திரன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

காவல்துறையினரின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பிஜேந்திரன், அந்த பெண்ணை ஹோட்டலில் வைத்து கொலை செய்து, பாட்னாவின் ஜானிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் அவரது உடலைப் புதைத்ததாக காவல்துறையினரிடம் கூறினார். உடலை அடக்கம் செய்வதற்கு முன், 10 கிலோ உப்பை பெண்ணின் உடல் மீது கொட்டியதாக கூறியுள்ளார். உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும், அதனால் உடலை அடையாளம் காணமுடியாமல் போகும் என்பதால் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #Sexual Harassment #Attempt Rape #Youth arrested #Janipur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story