×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த கொடூரம்... போக்சோவில் கைதான மருத்துவ ஊழியர்.!!

இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த கொடூரம்... போக்சோவில் கைதான மருத்துவ ஊழியர்.!!

Advertisement

திருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயது 
இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மதுபோதையில் இந்த கொடூர செயலை செய்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம்  ஜகத்தியா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை கடந்த 6ம் தேதி கரீம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் டைபாய்டு காய்ச்சல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இளம் பெண்ணிற்கு சிகிச்சையளிக்கும் அறையில் நுழைந்து பெண்ணுக்கு ஊசி போடவேண்டும் எல்லோரும்  வெளியே காத்திருங்கள் எனக்கூறி அறையை மூடியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

அறையில் சென்ற அந்த ஊழியர் அங்குள்ள சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து அப்பெண்ணுக்கு மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். பின்னர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அவர் வெளியே சென்றதும் அறைக்குள் நுழைந்த பெண்ணின் பெற்றோர் தங்களது மகள் அரை நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மயக்கத்தில் இருந்தாலும் வலியை உணர்ந்தேன்..." வென்டிலேட்டரில் கூட்டு பலாத்காரம்.!! ஊழியர்கள் கைது.!!

காவல்துறை விசாரணையில் அந்த ஊழியர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த  தட்சிணாமூர்த்தி வயது(23) என்றும் அவர் மதுபோதையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அதன்படி அந்த நபர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போனை சோதித்து பார்த்த போலீஸ் அதில் ஆபாச படங்கள் அதிகம் இருப்பதை கண்டு செல்போனை கையகப்படுத்தி மேற்கொண்ட விசாரணையை. துரிதபடுத்தியுள்ளனர் .

இதையும் படிங்க: இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த கொடூரம்... போக்சோவில் கைதான மருத்துவ ஊழியர்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Telengana #Crime Against Women #Sexual Abuse in Hospital #Employee Arrested Under Pocso
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story