இரு காதலிகளுடன் ஒரே நேரத்தில் இளைஞன் செய்த காரியம்! வீடியோவால் கொந்தளித்த முரட்டு சிங்கிள்ஸ்
young man got marriage with 2 lovers

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.மேலும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இருவருடனும் நீண்டநாட்களாக பழகி வந்துள்ளார.
இவரது இந்த காதல் விவகாரம் இரு பெண்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் இரு பெண்களும் அந்த இளைஞன் தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளனர். மேலும் ஒருவருக்கு விட்டுத்தர இருவருமே மறுத்துள்ளனர்.
இவ்வாறு இருவரும் இளைஞருடன் சண்டையிட்ட நிலையில், அவர் இருவரையும் சமாதானம் செய்து கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை கோவிலில் உள்ள நபர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமணத்திற்கு 3 குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் மூன்று பேரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.