கட்டுக்கட்டாக பணத்தை தீ வைத்து எரித்து சாம்பலாக்கிய இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்!
young man fired money in rest room
பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் என்ற பொறியாளர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சாலை கட்டுமானத் துறையில் வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனம் ஒரு எம்.எல்.ஏ-வின் மனைவிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
பல மில்லியன் மதிப்புள்ள சாலைத் திட்டத்தை அகற்றுவதற்காக, அவர் கோரிய லஞ்ச பணத்தில் முன்பணமாக ரூ.1.6 மில்லியன் லஞ்சம் பணத்தை அந்த நிறுவனம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் பணத்தை கொடுத்துவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளது.
இதனால் அதிகாரிகள் அவருடைய வீட்டை நெருங்குவதற்கு முன்பாகாவே, மூட்டையில் கட்டி வைத்திருந்த பணம் மற்றும் அதற்கான ஆவணங்களை வீட்டின் கழிவறையில் தீ வைத்து எரித்து நீரில் கரைத்துள்ளார்.
வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கழிவறையில் கட்டுக்கட்டாக பணம் எரிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். ஆனால், எவ்வளவு பணம் எரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.