×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குப்பை மேடாக கிடந்த நதி... தனி ஒருவனாக சுத்தம் செய்த 20 வயது இளைஞர்!

குப்பை மேடாக கிடந்த நதி... தனி ஒருவனாக சுத்தம் செய்த 20 வயது இளைஞர்!

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பியாவோரா பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் ‘பிட்டு தபாஹி’ என அறியப்படும் இவர், அப்பகுதியில் மாசடைந்து கிடந்த அஜ்னார் நதியை தானாக முன்வந்து சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளார். நதியில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், பாசி உள்ளிட்டவை அதிகளவில் தேங்கியிருந்த நிலையில், அதனை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார்.

இந்த முயற்சியை அவர் கடந்த ஜனவரி 26-ம் தேதி தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து பணியாற்றிய நிலையில், பின்னர் அவர்கள் விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிட்டு தனியாகவே நதிக்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். இதற்காக தேவையான சில பொருட்களையும் தனது சொந்த பணத்தில் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நதியின் பல பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி, அந்த இடங்களை சுத்தப்படுத்தியதுடன், மக்கள் தொடர்ந்து நதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் குப்பைத் தொட்டிகளையும் அமைத்துள்ளார். நதியின் தற்போதைய நிலையை காட்டும் ‘Before - After’ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: ஐயோ... அது பிஞ்சு குழந்தைடா...! இளைஞரிடம் ஒன்றரை வயது குழந்தையை... 15 நிமிஷம் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போன தாய்.! ஆடு மேய்பவர் சொன்ன அந்த வார்த்தை.... நெஞ்சை பதறவைக்கும் கொடுமை!!!

“ஒருவர் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்பதற்கு உதாரணமாக மாறியுள்ள பிட்டுவின் முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் அவரது பணியை பாராட்டியுள்ளார். இருப்பினும், ஒரு நதியை நீண்ட காலத்திற்கு சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும், முறையான கழிவு மேலாண்மையும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உடம்பெலாம் நடுங்குது... சுடுகாட்டில் எரியும் பிணத்திலிருந்து மாமிசத்தை எடுத்து சாப்பிட்ட பெண்! எலும்புகள், மண்டை ஓடை தேடி... சூடான எச்சத்தை எடுத்து.... கொடூர காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #Raj Nagar #young man #Cleaning river
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story