×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாலி கட்டும் நேரத்தில் மணப் பெண் கொடுத்த ஒரே ஒரு டாஸ்க்.! அம்பலமான மாப்பிள்ளையின் பித்தலாட்டம்.! நின்றுபோன திருமணம்.!

மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு இருப்பதை அறிந்த மணப்பெண் திருமண மேடை யிலேயே திருமணத்தை நிறுத்த

Advertisement

மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு இருப்பதை அறிந்த மணப்பெண் திருமண மேடை யிலேயே திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவ்ரியா என்ற மாவட்டத்தில் அர்ஜுன் சிங் என்பவரின் மகளுக்கும், சிவம் என்ற நபருக்கும் திருமணம் நடக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் அன்று திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகனுக்கு கண் குறைபாடு இருப்பதாக மணமகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.

மாப்பிள்ளை கருப்பு கண்ணாடி அணிந்த படியே இருந்தார், அவர் அந்த கண்ணாடியை கழட்டவேயில்லை. இதனால் அவர் கண் குறைபாடு ஏதேனும் இருக்குமோ? அதன் காரணமாக அவர் கண்ணாடியை கழட்டவில்லையோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அந்த சந்தேகத்தை தீர்க்க, மணப்பெண்  அருகில் இருந்த செய்தித்தாளை, கண்ணாடி இல்லாமல் படிக்கும் படி கூறியுள்ளார். 

ஆனால் மாப்பிள்ளை செய்தித்தாளை வாசிக்க தவறியதால், மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிச்சியடைந்தனர். உடனடியாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதன் பின், மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் உண்மையை கூறாமல் ஏமாற்றிவிட்டதாக கூறி, மணப் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young gir #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story