×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த வாலிபர்... ஆத்திரத்தில் வாலிபரின் சகோதரிக்கு இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்...

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த வாலிபர்... ஆத்திரத்தில் வாலிபரின் சகோதரிக்கு இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்...

Advertisement

பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் செல்போனுக்கு ஆண்கள் சில பேர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவது மற்றும் அந்த இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்தும் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான அந்த இளம் பெண் இச்சம்பவம் குறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசுக்கு புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளம் பெண்ணுக்கு தெரிந்த மற்றொரு இளம் பெண்ணே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதாவது இளம் பெண்ணின் அண்ணனை மற்றொரு இளம் பெண் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரின் காதலை ஏற்க மறுத்து தோழியாக மட்டுமே பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் அந்த வாலிபர்.

இதனால் கோபமான அந்தப் பெண் காதலனின் சகோதரி பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஓபன் செய்து அதில் அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தது மட்டுமின்றி அந்த இளம் பெண்ணின் செல்போன் நம்பரையும் பதிவு செய்துள்ளார்.

அதனை வைத்து தான் ஆண்கள் சில பேர் அந்த இளம் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bengaluru #Post sexual picture #young girl #arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story