தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு வந்த சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து வாலிபர் செய்த கொடூர செயல்.! 6 மாதங்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி பின்னணி.!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வரும்போதிலும் பல இடங்களில

young girl abused in marriage function Advertisement

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வரும்போதிலும் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் 16 வயது சிறுமியை மயக்கமருந்து கொடுத்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நசிராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,16 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு அங்குள்ள ஒரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சிறுமி சென்றுள்ளார். அப்போது திருமண விழாவில் கலந்து கொண்ட ஒரு சிறுவன், சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த தேனீரைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி தன் சுயநினைவை இழந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் அந்த சிறுமிக்கு முதலுதவி செய்வது போல திருமண மண்டபத்திற்கு அருகேயுள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

young girl

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமி கொடுத்த தகவலின்பேரில் மருத்துவமனை மூலமாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #abused
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story