×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விபத்தில் இறந்தவரின் ஆத்மா என்னை கூப்பிடுகிறது! நான் போகிறேன் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!. பதறி போன குடும்பத்தார்!.

விபத்தில் இறந்தவரின் ஆத்மா ஏன்னை கூப்பிடுகிறது! நான் போகிறேன் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!. பதறி போன குடும்பத்தார்!.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சவுரப் நாக்புர்கார் என்ற இளைஞர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர், அவரது வீட்டில் சகோதரியின் துப்பட்டாவால் தூக்கு போட்ட நிலையில், வீட்டில் இறந்து கிடந்துள்ளார். 

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை நடத்திய போது,  கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் அவர், தான் கண்ணால் பார்த்த விபத்தில் பலியான சிறுவனின் ஆத்மா தன்னை அழைப்பதாக சவுரப் எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் , தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும், அவர்களை சகோதரி நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சவுரப் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விபத்தை கண்ணால் பார்த்ததும் தான் பேய் பிடித்தது போல உணர்ந்ததாகவும் சவுரப் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்த போலீசார் சவுரப்பின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மாதம் அவர்கள் இருக்கும் பகுதியின் சாலையில் நடந்த விபத்து ஒன்றில் பெண் மற்றும் ஒரு சிறுவன் பலியாகினர். அதனை சவுரப் நேரில் பார்த்தார் என தெரியவந்தது.

கடந்த மாதம் தனது பிறந்த நாளை ஆதரவற்ரோர் இல்லத்தில் வைத்து கொண்டாடிய சவுரப், தனது நண்பர்களும் இதே போல பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனவும் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த திடீர் மரணம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #young boy #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story