இனி நீங்கள் அலைய தேவையில்லை... டிரான்ஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஆன்லைனிலேயே பெறலாம்..!
இனி நீங்கள் அலைய வேண்டாம்... டிரான்ஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஆன்லைனிலேயே பெறலாம்..!
சாலை போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் முழுமையாக வழங்கும் நடவடிக்கையை சாலைப்போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது.
புதுடெல்லி, போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை முழுமையாக ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ரீஜனல் ட்ரேன்ஸ்போர்ட் ஆஃபிஸூக்கு நேரில் வராமல் இணையதளம் மூலமாக சேவையை பெறும் வசதியை முதலமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, டிரைவிங் லைசென்ஸ் வாங்குதல் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ரினிவல் செய்வது, அட்ரஸ் மாற்றுவது, போன்றவற்றை பொதுமக்கள் www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக தாங்களாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில், டிரைவிங் லைசென்ஸ் கண்டக்டர் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு, பெர்மிட், உரிமையாளர் மாற்றம் போன்ற மொத்தம் 58 சேவைகளை இணையதளம் மூலமாக செயல்படுத்த, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சட்டபூர்வ ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு போன்ற டிரான்ஸ்போர்ட் தொடர்பான 58 சேவைகளை ஆன்லைன் மூலம் செயல் படுத்தலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் மூலம் செலுத்தி கொள்ளலாம். இதற்கு ரீஜனல் ட்ரான்ஸ்போர்ட் ஆஃபீஸூக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆதார் எண் இருப்பவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் செயல்படுத்திக் கொள்ளலாம். ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ ஆஃபிஸூக்கு நேரடியாகச் சென்று இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளால் பொதுமக்களின் நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின் சுமைகளையும் குறைக்கும். மேலும் ரீஜனல் ட்ரான்ஸ்போர்ட் ஆஃபிஸூக்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இது அவர்களின் செயல்பாட்டில் கூடுதல் திறனுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.