×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்க்கத்தான் கன்றுக்குட்டி மாதிரி!! ஆனால் உண்மை அது இல்லை!! வைரலாகும் வீடியோவை நீங்களும் பாருங்க..

உலகிலையே மிகவும் குள்ளமான பசு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

உலகிலையே மிகவும் குள்ளமான பசு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சாரிகிராம் ஷிகோர் வேளாண் பண்ணையில் உலகின் மிகவும் குள்ளமான பசு ஒன்று உள்ளது. பிறந்து 2 வருடங்கள் ஆகிஉள்ளநிலையில், ராணி என பெயரிடப்பட்டுள்ள இந்த பசுவானது 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுதான் உலகின் மிகவும் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014-ல் அங்கீகரித்தது. அப்போது அந்த பசுவின் உயரம் 61 செ.மீ. ஆகும். ஆனால் தற்போது ராணி பசு 51 செ.மீ உயரமே உள்ளதால் இந்தபசுதான் தற்போது உலகின் மிகவும் குள்ளமான பசுவாக உள்ளது.

இந்த பசு குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானநிலையில், கொரோனா அச்சத்தையும் மறந்து, அந்த பசுவை பார்க்கவும், அதனுடன் செல்பி எடுக்கவும் அந்த பகுதி மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cow #World smallest cow #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story