பெண் காவலர்கள் பயிற்சி மையக் கழிவறையில் கேமரா இருக்கு! தண்ணீர், மின்சாரம் எந்த வசதியும் சரியா இல்ல! அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பெண்கள் போராட்டம்! வைரலாகும் வீடியோ..
பெண் காவலர்கள் பயிற்சி மையக் கழிவறையில் கேமரா இருக்கு! தண்ணீர், மின்சாரம் எந்த வசதியும் சரியா இல்ல! அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பெண்கள் போராட்டம்! வைரலாகும் வீடியோ..
உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பிச்சியா - ஷாக்பூர் பகுதியில் இயங்கும் 26வது பிஏசி (PAC) காவலர் பயிற்சி மையத்தில், தற்போது 600க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த மையத்தில் தங்கும் வசதி, மின்சாரம், தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை நலவசதிகள் இல்லாததால், கடும் அவலநிலை நிலவுகிறது.
இதன் காரணமாக பயிற்சியில் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை காலை மைய வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். கதறி அழும் அவர்களின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பயிற்சியாளர்கள் கூறியதாவது, “ஒரே ஒரு RO இயந்திரம் மட்டுமே உள்ளது. அதுவும் பாதி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. குளிர்பானி இயந்திரங்கள் இல்லை. கழிப்பறைகளில் கசிவு. சிலர் வெளியே குளிக்க வேண்டிய நிலை. அதுமட்டுமின்றி, கழிப்பறை பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.
மேலும், அதிகாரிகள் அவர்கள் புகாருக்கு பதிலளிக்காமல் மோசமான வார்த்தைகளில் பேசி அவமதிக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட உயர் அதிகாரிகள் மையத்திற்குச் சென்று, பயிற்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அமைதிப்படுத்தினர். விசாரணையில், மையத்தில் மட்டுமே 300 பேருக்கு தங்கும் வசதி இருப்பது தெரிந்தது. ஆனால் தற்போது 598 பேர் பயிற்சியில் உள்ளதால் இடத்தின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிஏசி கமாண்டண்ட் ஆனந்த்குமார் கூறியதாவது, “புதிய கழிப்பறைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வசதிகளும் விரைவில் வழங்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பசுவின் மடியிலிருந்து நேரடியாக பால் குடிக்கும் குழந்தை! அதிர்ச்சிகரமான காரணம்! பதறவைக்கும் வீடியோ..