×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாம்பை வைத்து மாமியாரை கொலை செய்த மருமகள்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை..!

Women killed mother in law with snake for illegal relationship

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கள்ள காதலை தட்டி கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்கவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணின் கணவர் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தனது மாமியாருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த அவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியுள்ளது.

அந்த இளைஞருடன் பலமணிநேரம் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். இதை கவனித்துவந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து மாமியாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு பாம்பை வாங்கிகொண்டுவந்து அவரது அறைக்குள் விட்டுள்ளார்.

இதில் பாம்பு கடித்து மாமியார் இறந்துள்ளார். ஆனால், அவரின் மரத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியதை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடந்த உண்மையை மருமகள் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண் மற்றும் அவரது கள்ள காதலன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #snake
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story