×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷாக்கிங்... கோவில் அருகே நாய்களுக்கு மாமிசம் வழங்கிய பெண்.!! மத உணர்வுகளை புண்படுத்தியதாக காவல்துறை வழக்கு.!!

ஷாக்கிங்... கோவில் அருகே நாய்களுக்கு மாமிசம் வழங்கிய பெண்.!! மத உணர்வுகளை புண்படுத்தியதாக காவல்துறை வழக்கு.!!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவில் அருகே தெரு நாய்களுக்கு இறைச்சியை உணவளித்த 2 பெண்கள் மீது மத வழிபாட்டு தளத்தின் புனிதத் தன்மையை அவ மதித்ததாகவும் அப்பகுதியில் வாழும் மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாகவும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இந்த வழக்கில் ஷீலா ஷா என்ற சமூக நல பணியாளர் தொடர்ந்த வழக்கின் பேரில் காவல்துறையினர் நந்தினி  பேலேகர் மற்றும் பல்லவி பட்டில் ஆகிய இரண்டு பெண்களின் மீது காவல்துறையினர் ஐபிசி செக்சன் 295, 295(A),504 மற்றும் 56 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  ஷீலா ஷா விலங்குகளின் காவலர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் பெண்கள் மகாலட்சுமி கோவில் அருகே நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு ஆட்டு இறைச்சி மீன் கோழி போன்றவற்றை உணவளிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் அந்தப் பெண்கள் புகார் கொடுத்த தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர்" அந்தப் பெண்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரின் மீதும் பல புகார்கள் வந்ததை தொடர்ந்து அவர்களை கண்காணித்து எச்சரித்தோம். எனினும் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கோவில் இருக்கும் பகுதிகளில் இறைச்சியை விலங்குகளுக்கு அளித்ததால் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Mumbai #Feeding meat #temple #Women Booked #Insulting Reigious Sentiments
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story