கணவனை காணவில்லை என கதறிய மனைவி..! அவரை ஏற்கனவே தகனம் செய்துவிட்டதாக கூறிய மருத்துவமனை..!
Women complaint about husband missing hospital burned him
தனது கணவனை காணவில்லை என மனைவி தேடியநிலையில், உங்கள் கணவரை தகனம் செய்துவிட்டதாக மருத்துவமனை கூறியதை கேட்டு மனைவி அதிர்ச்சி அடைந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகள் இரண்டு பேர் என மூன்று பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையியல் சிகிச்சை முடிந்து அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அந்த பெண்ணின் கணவர் கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பவில்லை .
இந்நிலையில், எனது கணவனை காணவில்லை என அனைத்து விவரங்களையும் கூறி அந்த பெண் டிவிட்டரில் தெலுங்கானா தகவல் தொழிநுட்ப அமைச்சாறுக்கு டிவிட் செய்துள்ளார். இந்த ட்விட் அமைச்சரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, அந்த பெண்ணின் கணவர் கடந்த மே 1 அன்றே உயிர் இழந்துவிட்டதாகவும், அவரை ஏற்கனவே தகனம் செய்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், காரணமின்றி அந்த பெண் மருத்துவமனை மீது குற்றம் சுமத்துவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.