ஐயோ...பாவம்! குகைக்குள்ள போன பெண்ணால்.. முன்னும் போக முடியல, பின்னும் வர முடியல..! டார்ச் வெளிச்சத்துல நடந்த அதிர்ச்சி.. கலங்க வைக்கும் காட்சி..!!!
குறுகிய இருண்ட குகைக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பெண் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. குகையில் அவருக்கு ஒருவர் உதவி செய்த காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
குறுகிய, இருட்டான குகைக்குள் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர், வெளியே வர முடியாமல் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குகைக்குள் போதிய காற்றோட்டம் இல்லாததால், முன்னோக்கிச் செல்லவும் முடியாமல், பின்னோக்கித் திரும்பவும் முடியாமல் அவர் தவித்ததாக வீடியோவில் தெரிகிறது. பயத்தில் தனது தாயை அழைத்தபடி உதவி கேட்டு கதறிய காட்சிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
குகைக்குள் சிக்கித் தவித்த பெண்
குகையின் குறுகிய பாதையில் சிக்கிய அந்தப் பெண், வெளியே செல்ல முடியாமல் செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், டார்ச் லைட் உதவியுடன் அவரை மீட்க முயற்சி செய்தார். பதற்றத்தில் இருந்த பெண்ணை சமாதானப்படுத்தி, தைரியமாக இருக்கும்படி கூறினார்.
இதையும் படிங்க: பட்ட பகலில் கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! பபகீர் வீடியோ ..!!!
மேலும், அந்தப் பெண் வைத்திருந்த கனமான பையை வாங்கி வைத்துக்கொண்டார். உடல் சுமை குறைந்தால், குகையிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய முடியும் என்பதால் அவர் இந்த உதவியைச் செய்ததாக வீடியோவில் தெரிகிறது. தொடர்ந்து, வெளியே உள்ள டிக்கெட் கவுன்டரில் இருப்பவர்களை அழைத்து உதவி பெற்று வருவதாகவும் உறுதியளித்தார்.
சமூக வலைதளங்களில் எழுந்த எச்சரிக்கை
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இஷிதா என்ற சமூக வலைதளப் பயனர், இதுபோன்ற இடங்களில் சிறிய கவனக்குறைவு கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 'தி கிளிக் 24' என்ற கணக்கும், புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
வீடியோ உண்மையானதா எனவும் கேள்வி
இதற்கிடையே, அந்த வீடியோ உண்மையான சம்பவத்தைப் பதிவு செய்ததா அல்லது கேமராவின் கோணத்தால் அப்படித் தெரிகிறதா என சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பெண் உண்மையிலேயே குகைக்குள் சிக்கியிருந்தாரா, அவர் எப்படி அந்த இடத்திற்குள் சென்றார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
சுற்றுலா செல்வதும் புதிய இடங்களைப் பார்ப்பதும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தாலும், சாகசத்தின் பெயரில் ஆபத்தான இடங்களுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதே இந்த வீடியோவைப் பார்த்த பலரின் கருத்தாக உள்ளது.