தலை, கையில் கொடூர காயங்கள்.. பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்த பெண் கொலை.. துப்புக்கொடுத்த 300வது சிசிடிவி.!
இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் 2 இளம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் கொலை:
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில், சம்பவத்தன்று இளம்பெண் ஒருவரின் சடலம் தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் மறைவான இடத்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆரம்பகட்ட அடையாளங்களை வைத்து பலாத்கார முயற்சி என்பதை உறுதி செய்தனர். மேலும், பெண் உயிரிழந்ததால் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!
விசாரணை:
பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்த பெண் கொல்லப்பட்டது அம்பலமானது. அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக ரைஸ் மில் தொழிலாளி ஹரிஷ் யாதவ் (வயது 19), மெக்கானிக் நிதீஷ் தாகூர் (வயது 20) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்துள்ளனர்.
வேலை தருவதாக...
அப்போது, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்ணை கவனித்தவர்கள், சிறிய வேலை ஒன்று இருப்பதாகவும் அதற்கு கூலி கொடுப்பதாகவும் பெண்ணை அழைத்துள்ளனர். பெண்ணும் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் உடன் செல்ல, பெண்ணை மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அங்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த விஷயத்துக்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தாக்குதல்:
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பெண்ணை கடுமையாக தாக்கி இருக்கிறது. கற்கள் கொண்டு பெண்ணின் தலை மற்றும் உடல் பகுதியில் தாக்கியதில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின் அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்ற நிலையில், அதிகாரிகள் சுமார் 300 சிசிடிவி கேமிரா மற்றும் ரிக்சா ஓட்டுனர்களின் வாக்குமூலம் ஆகியவற்றை ஆதாரங்களாக சேர்ந்து இளைஞர்களை கைது செய்தனர். கடந்த ஜூலை 16 ம் தேதி பெண் மாயமான நிலையில், குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அதே நாளில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் எந்த விதமான துப்பும் கிடைக்காத நிலையில், இறுதியில் 300 வது சிசிடிவி கேமிராவும், ரிக்சா ஓட்டுநர் கொடுத்த தகவலும் ஆதாரமாக சேர்க்கப்பட்டது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!