×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீங்க இங்க இருங்க! சாமி கும்பிட்டுட்டு வர்றேன்.... கோவிலுக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் கணவன் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி..! மருமகளின் மாயாஜாலம்... பரபரப்பு பின்னணி..!!!

தசரா திருவிழாவுக்குக் கணவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற இளம் பெண், கோவிலுக்குள் செல்வதாகக் கூறிவிட்டு மாயம். இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

தசரா திருவிழாவைக் காணக் கணவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற இளம் பெண் ஒருவர் திடீரென மாயமானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவதாகக் கூறிய அவர், சில நிமிடங்களிலேயே காணாமல் போயியுள்ளார். அவர் திட்டமிட்டு வெளியேறினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

குடும்பத்தினருடன் திருவிழாவுக்குச் சென்ற பெண்

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தசரா திருவிழாவைக் காண வேண்டும் என்று கூறி, அந்தப் பெண் தனது கணவன், மாமியார் மற்றும் நாத்தனாருடன் சென்றதாகத் தெரிகிறது. திருவிழா மைதானத்துக்குச் சென்றதும், அங்கிருந்த கூட்டத்தைச் சுற்றிப் பார்த்து சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அய்யய்யோ... ராவணனை எரித்ததும் பொதுமக்களை நோக்கிப் பாய்ந்த பட்டாசுகள்! பதறி அடித்து ஓடிய மக்கள் கூட்டம்... கடும் பதற்றம்..!!!

அதன்பிறகு, குடும்பத்தினரை கோவிலுக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, தான் மட்டும் உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். அவரும் திரும்பி வருவார் எனக் குடும்பத்தினர் காத்திருந்தனர்.

சில நிமிடங்களில் மாயமானதால் அதிர்ச்சி

நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வெளியே வராததால் சந்தேகமடைந்த மாமியாரும் நாத்தனாரும் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் அங்கு இல்லாதது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர் முன்கூட்டியே திட்டமிட்டு வெளியேறினாரா அல்லது திருவிழா கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்பது தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: அர்ணாப் புயலின் ராட்சத அலைகள்..! சல்பர் மூட்டைகளுடன் தரைத்தட்டி தத்தளிக்கும் பிரம்மாண்ட கப்பல்..! வைரலாகும் புயலின் தாக்கம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தசரா திருவிழா #இளம் பெண் மாயம் #Dasara Festival #Woman Missing #குடும்பத்தினர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story