"20 வருஷமாச்சு வயித்துல ஒரு புழு பூச்சி தங்கல... " 42 வயது பெண் எரித்து கொலை.!! மாமியார், கணவன் தலைமறைவு.!!
20 வருஷமாச்சு வயித்துல ஒரு புழு பூச்சி தங்கல... 42 வயது பெண் எரித்து கொலை.!! மாமியார், கணவன் தலைமறைவு.!!
ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தையில்லாத காரணத்தால் 42 வயது பெண் தனது கணவர் குடும்பத்தாரால் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாகயிருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தை சேர்ந்தவர் சரளாதேவி. இவருக்கு கடந்த 2005ம் வருடம் அசோக் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இதனால் சரளாதேவியை அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாதி எரிந்த நிலையில் சரளாதேவியின் உடலை தகனம் செய்வதற்காக அவரது கணவர் குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தகனம் செய்யும் இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரளாதேவியின் கணவர் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் காவல்துறையிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "எனக்கு பெண் கொடுத்த நீங்க நல்லவங்க.. ஆனா உங்க பொண்ணு.." திருமணமான 1 வருடத்தில் சோகம்.!! மணமகனின் துயர முடிவு.!!
இதனைத் தொடர்ந்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு சரளாதேவியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சரளாதேவியின் கணவர் அசோக்குமார், மாமியார் ராஜ்வதி, மாமனார் ராஜ்வீர் சிங், நாத்தனார் பூனம் மற்றும் பூஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள இவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!