"சொந்த மகனாக வளர்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்... " 45 வயது பெண் பலாத்காரம்.!! 17 வயது சிறுவன் வெறி செயல்.!!
சொந்த மகனாக வளர்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்... 45 வயது பெண் பலாத்காரம்.!! 17 வயது சிறுவன் வெறி செயல்.!!
கர்நாடக மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தத்தெடுத்து, தாய் போல் வளர்த்த பெண்ணை கொலை செய்து வாழை தோட்டத்தில் புதைத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் 45 வயதான அவரை, யாரோ கொலை செய்து உடலை வாழை தோட்டத்திற்குள் வீசியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்ட பெண் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சண்டை போடுவதை ஒருவர் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது அந்த சிறுவன், பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
அதன்படி கொலை செய்யப்பட்ட பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில் விவசாய கூலியாக தன் வாழ்க்கையை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதிகள் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். அந்த குழந்தையிடம் இந்த பெண் அன்பாக இருந்துள்ளார். தன்னுடைய சொந்த மகனைப் போல நினைத்து குழந்தை மீது அன்பு காட்டியுள்ளார். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு அவனை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் தேவையான உதவிகளை செய்வது என ஒரு தாயாக செயல்பட்டுள்ளார். ஆனால் அந்த சிறுவன் அந்த பெண்ணை தாய் போன்று பார்க்காமல் தன் காம இச்சையை தீர்க்கும் ஓர் உடலாக பார்த்துள்ளான்.
இதையும் படிங்க: காதலியை நண்பனுக்கு விருந்தாகிய ரவுடி.. கொலையில் முடிந்த கள்ள உறவு.!! அதிர்ச்சி பின்னணி.!!
இந்நிலையில் கடந்த15ம் தேதி பக்கத்து கிராமத்துக்கு வாழை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த போது அங்கு வந்த சிறுவன் யாருமில்லாததை கவனித்து அந்த பெண்ணிடம் தாகத முறையில் நடந்துள்ளான். மகனைப் போல வளர்த்தவன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததால் அதிர்ச்சியடைந்த பெண் தப்பிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த சிறுவன் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து ,அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே புதைத்து விட்டு தப்பியோடியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரசோதனைக்காக அனுப்பிவைத்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சிங்கிள் மாதரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்... காவல்துறையில் பரபரப்பு புகார்.!!