×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் மீண்டுமா.. ஒடிசாவில் தடம் புரண்ட ரயில்.. பயணிகளின் கதி என்ன.?

மீண்டும் மீண்டுமா.. ஒடிசாவில் தடம் புரண்ட ரயில்.. பயணிகளின் கதி என்ன.?

Advertisement

ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி பாலசொர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது எதிர் திசையில் வந்த பெங்களூர் ஹவுரா அதிவிரைவு ரயிலும் விபத்தில் சிக்கி தடம் புரண்டது. இந்தக் கோர விபத்தில் 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 1,100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் கோர விபத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடாவில் இருந்து சம்பல்பூர் சென்று கொண்டிருந்த  மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது மாடு ஒன்று ரயில் மீது மோதியதால் ரயிலில் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் நல்வாய்பாக உயர் சேதம் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு முழு வீச்சில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#odisha #Train derailed #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story