மனைவியிடம், கணவன் கேட்ட ஒன்றே ஒன்று!.. அடுத்த நொடியில் உயிரைவிட்ட மனைவி!.
wife suicide get suicide for his husband
ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருபவர் சௌத்ரி. இவர் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீஷா, கச்சிபவ்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்த நிலத்தை விற்குமாறு, சௌத்ரி தன்னுடைய மனைவியை வற்புறுத்தியுள்ளார். அந்த நிலம் தன்னுடைய திருமணத்தின் போது தந்தை கொடுத்தார். அது இனிமேல் மகளுக்கு சொந்தம்" எனக்கூறி ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீஷா, கணவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து தூக்குமாட்டி தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளார்.
இதற்கிடையில் தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்த ஸ்ரீஷாவின் சகோதரன், கதவை திறந்து உள்ளே சென்ற போது, குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்துள்ளது. ஸ்ரீஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உறவினர்கள் மற்றும் சௌத்ரிக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி இறந்த தூக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.