திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி.! பரிதாபமாக போன உயிர்.!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் சுலப் கன்சல் என்ற
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் சுலப் கன்சல் என்ற நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறி உள்ளார். ஆனால் அவருக்கு சொந்தமாக ஒரு ஆலை கூட இல்லை என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்து பாரதி அதிர்ச்சியடைந்தார்.
இந்தநிலையில் பாரதியை வரதட்சணை கேட்டு கன்சல் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாரதியின் பெற்றோர் வீட்டுக்கு வருவதாக நேற்று முன் தினம் இரவு போன் செய்து அவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக தனது புடவைகள், மற்ற பொருட்களை சூட்கேசில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.