தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.! உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.!

கணவன் தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.! உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து.!

wife complaint on husband Advertisement

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பலாத்காரமே என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, திருமணம் என்பது பெண்களுக்கு எதிராக காட்டுமிராண்டிதனமான செயல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல திருமணத்தினால் மட்டும் ஆணுக்கு சிறப்பு உரிமை எதுவும் கிடைத்துவிடாது என்றார்.

ஆண் ஆண் தான், சட்டம் சட்டம் தான், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான். கணவனாக ஆண் மனைவியான பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான். பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால், அது கணவனுக்கும் தண்டனை உண்டு தான்.

மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது மனைவிக்கு உடல் மற்றும் உளவியல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே மனைவி பலாத்கார புகார் கூறினால் அதனை கணவன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story