நடு இரவில் மருத்துவமனையில் தானாக நகர்ந்து சென்ற வீல் சேர்! பதைபதைக்கும் வீடியோ காட்சி.
Wheel chair moved automatically in hospital

உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினம் தினம் ஏதவது ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் சண்டிகர் மாநிலத்தில் மருத்துவமனையில் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாற்காலி ஓன்று தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள மற்டுத்துவமனையில்தான் இந்த காட்சி நடந்துள்ளது. தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாற்காலி திடீரென பின்னோக்கி நகர்ந்தது. பின்னோக்கி நகர்ந்த நாற்காலி சிறிது நேரத்தில் யாரோ முன்னோக்கி தழுவதுபோல தானாகவே நகர்ந்து சாலை வரை சென்றுள்ளது.
நாற்காலி தானாக நகர்ந்து சாலை வரை செல்வதை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஒரு வேலை தரை வளுவளுப்பாக இருப்பதாலும், மெலிதாக வீசிய காற்றில் சக்கர நாற்காலி நகர்ந்தது என்று அனைவரும் யோசிக்கலாம். ஆனால், நாற்காலி முதலில் எப்படி பின்னோக்கி நகர்ந்தது? பின்னர் எப்படி முன்னோக்கி நகர்ந்தது என்று சற்று குழப்பமாகவே உள்ளது.