தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி கள்ளக்காதலனுடன் மாயம்.. கண்டறிந்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் அறிவித்த கணவன்.!

மனைவி கள்ளக்காதலனுடன் மாயம்.. கண்டறிந்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் அறிவித்த கணவன்.!

West Bengal Husband Announce Reward Rs 5000 INR For Find Missing Wife With Son She Affair Advertisement

தனது மனைவி குழந்தையோடு கள்ளக்காதலனுடன் தப்பி சென்ற நிலையில், அவரை கண்டறிந்து தருவோருக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என கணவர் தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது. 

மேற்குவங்கம் மாநிலத்தை சார்ந்த தச்சு தொழிலாளிக்கு மனைவி மற்றும் கைக்குழந்தைகள் உள்ளனர். இவர் பணி நிமித்தம் காரணமாக ஹைத்ராபாத் நகரில் தனியாக தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். கணவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குழந்தையுடன் வசித்து வந்த மனைவிக்கு மற்றொரு நபருடன் கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், பெண் தனது கள்ளக்காதலனை அவரது வீட்டிற்கே அழைத்து சென்று உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என நினைத்து, கணவர் திடீரென ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

west bengal

இரவு வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் அரை உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, யாரோ வீட்டில் இருந்து வெளியேறுவது போல தோன்றியுள்ளது. யார் என பார்க்கும் போது, தனது மனைவி குழந்தையுடன் செல்வது உறுதியாகியுள்ளது. அவரை பிடிக்க முயற்சித்தும் பலனில்லாது, ஜன்னல் வழியே எகிறி குதித்து விரைந்து சென்றுள்ளார். கீழே காத்திருந்த நானோ காரில் மனைவி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், வீட்டிற்கு வந்து கணவர் எதற்ச்சையாக பார்க்கையில் நகைகள், அடையாள அட்டை ஆவணம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உட்பட பெண் மற்றும் குழந்தைக்கு தேவையான ஆவணத்தை எடுத்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த கணவர் உண்மையை உணர்ந்து, மனைவியை கண்டறிய ஆசைப்பட்டு சமூக வலைத்தளத்தில் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#west bengal #Hyderabad #India #Affair #missing #Reward #Social media #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story