ஐயோ... கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண்...! உடல் முழுவதும் வெந்து துடிதுடித்து பலியான கொடூரம்...! குலை நடுங்க வைக்கும் காட்சி...!!!
விஜயவாடாவில் விநாயகா சதுர்த்தி அன்னதான நிகழ்ச்சியில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகா சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. சமையல் பணியில் ஈடுபட்டிருந்த சுஜாதா (46), கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாம்பார் பாத்திரத்தை எடுத்துச் சென்றபோது விபரீதம்
காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் கூறிய தகவலின்படி, விநாயகா சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான சமையல் பணிகளில் சுஜாதா உதவியாளராக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பிரம்மாண்ட மலைப்பாம்புடன் குத்தாட்டம் போட்ட பெண்....! உடனே போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை... ஷாக் வீடியோ..!!!
சமையல் கூடத்தில் பெரிய பாத்திரத்தில் இருந்த சாம்பாரை எடுத்துச் செல்லும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. அப்போது கொதித்துக்கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்திற்குள் அவர் விழுந்துள்ளார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
தீவிர சிகிச்சை பெற்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை
விபத்தை பார்த்ததும் அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் உடனடியாக சுஜாதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், தீக்காயங்களின் தீவிரம் காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சுஜாதா பாத்திரத்தில் விழுந்ததற்கான காரணம் மற்றும் அப்போது சமையல் கூடத்தில் இருந்த சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இது விபத்து மரணம் என கருதப்பட்டாலும், விசாரணை முடிந்த பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகா சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடந்த இந்த சமையல் கூட விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சுஜாதாவின் குடும்பத்தினருக்கு உறவினர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.