×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING : டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விலையில்.... முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...!!!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு குறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, நுண்ணறிவு போலீசாருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி கண்காணிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் ₹10 முதல் ₹30 வரை கூடுதலாக பெறப்படுவதாக மது பிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகும் பல இடங்களில் கூடுதல் கட்டண வசூல் தொடர்கிறது என்ற தகவல்கள் அரசின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனையை தீவிரமாகக் கண்காணிக்க உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு போலீசாருக்கு நேரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுண்ணறிவு போலீசாருக்கு சிறப்பு பொறுப்பு

முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மறைமுக கண்காணிப்பு நடத்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மே மாதத்தில் ஒரே நாள், ஒரே கட்ட தேர்தல்! ஓரிரு வாராங்களில் தமிழக தேர்தல் தேதி.... முக்கிய அறிவிப்பு வெளியானது!!!

இதனால் மாவட்ட வாரியாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் மற்றும் அதற்கு துணைபுரியும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக தெரிகிறது.

புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி

கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் ‘எக்ஸ்ட்ரா சார்ஜ்’ வசூல் செய்வது குறித்து பொதுமக்கள் மற்றும் மது வாங்குபவர்கள் பலமுறை குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு கண்காணிப்பு உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிரடி காட்டும் விஜய்! விஜய்யின் "ஆபரேஷன் ப்ளூ ஜெயண்ட்டால் "அலறும் திமுக..... EX அமைச்சர்கள் 5 பேர் கைது? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #விஜய் அரசு #Tamil Nadu Liquor Shops #டாஸ்மாக் கூடுதல் கட்டணம் #TVK Government
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story