×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

Venkaiah Naidu affected by corona

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 கொரோனாவால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அவரது மனைவி திருமதி. உஷா நாயுடு அவர்களுக்கும் எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்ததால் அவரும் தனிமையில் உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vice predident #venkaiya naidu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story