வாழ்ந்தா இவன் கூட தான் வாழ்வேன்...! நமக்கு வளர்ந்த 2 பிள்ளைகள் இருக்காங்க... அவுங்களுக்காக வா! கண்ணீர் விட்டு கெஞ்சிய கணவர்... வாலிபரை கட்டிப்பிடித்து வர மறுத்த மனைவி! பரபரப்பு சம்பவம்...!!!
வாரணாசி ரயில் நிலையத்தில் 20 வயது வாலிபரை சந்தித்த திருமணமான பெண்ணை கணவர் நேரில் பிடித்தார். குடும்பத்தை விட்டு அவருடன் செல்ல பெண் பிடிவாதம் பிடித்ததால் பரபரப்பு.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ரயில் நிலையத்தில் கணவரை விட்டு 20 வயது வாலிபரை சந்திக்க வந்ததாக கூறப்படும் இரண்டு குழந்தைகளின் தாயை, அவரது கணவர் நேரில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் கெஞ்சியும் வீட்டுக்கு வர மறுத்த அந்தப் பெண், வாலிபருடன் தான் வாழப்போவதாக கூறியுள்ளார்.இதையடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் நேருக்கு நேர் சிக்கிய ஜோடி
வாரணாசி ரயில் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் 20 வயது வாலிபரை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த அவரது கணவர், இருவரையும் நேரில் பார்த்துள்ளார். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குழந்தையை கணவரிடம் காட்ட வீடியோ கால் செய்த மனைவி! போனை எடுக்காத ஆத்திரத்தில்.... மனைவி எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!
ஆத்திரமடைந்த கணவர், இருவரிடமும் பேசியுள்ளார்.அப்போது தங்களது குடும்பத்தை நினைத்துப் பார்க்கும்படி மனைவியிடம் அவர் கண்ணீர் விட்டு கெஞ்சியாதாக கூறப்படுகிறது. குடும்பத்தை காப்பாற்ற வீட்டுக்கு திரும்புமாறும், தங்களுக்கு இரண்டு வளர்ந்த குழந்தைகள் இருப்பதாகவும் கூறி அவர் கெஞ்சியுள்ளார்.
வாலிபருடன் தான் வாழ்வேன் என பிடிவாதம்
ஆனால் கணவரின் வேண்டுகோளை அந்தப் பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. மாறாக, கண்ணீர் விட்டபடியே அந்த 20 வயது வாலிபரை கட்டியணைத்துக் கொண்டு, அவருடன்தான் வாழப்போவதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாலிபரும் பெண்ணை விட்டுக்கொடுக்க மறுத்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது.
போலீசார் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை
பொதுமக்கள் முன்னிலையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்ததால், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், பெண்ணையும் அந்த வாலிபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு வாலிபருடன் செல்ல பெண் பிடிவாதம் பிடித்ததாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
இதையும் படிங்க: மொத்த குடும்பமே போச்சே... கனமழையால் நள்ளிரவில் இடிந்து விழுந்த வீடு! தூக்கத்திலேயே பிரிந்த மூவரின் உயிர்! கிராமமே பெரும் சோகத்தில்...!!!